Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹோபார்ட் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா ஜோடி..!!

ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஹோபர்ட் நகரில் மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா கிச்னோக் ஜோடி பங்கேற்றது. அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடான்செக் – செக்குடியரசு மேரி மேரி போஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் செட் ஆட்டம் ஆட்டத்தில் இரு ஜோடிகளும் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர்.

Image result for Nadiia Kichenok Sania Mirza

இதனால் முதல் செட் ஆட்டம் 6-6 என்ற நிலையில் டை ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரில் சானியா ஜோடி ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றியது. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் முதல் செட் ஆட்டத்தைப் போல் இல்லாமல் சானியா ஜோடி எளிதாக 6-2 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் வரை நீடித்தது.

Image result for Nadiia Kichenok Sania Mirza

குழந்தைப்பேறுக்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சானியா மிர்சா டென்னிஸுக்கு திரும்பிய நிலையில், முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சானியா மிர்சா ஜோடியை எதிர்த்து சீனாவின் ஷாய் பெங் – ஷாய் செங் இணையை எதிர்கொள்ளவுள்ளது.

Categories

Tech |