Categories
தேசிய செய்திகள்

“கையை பிடித்து ஆட சொன்ன” மாப்பிள்ளையின் நண்பர்கள்…. மணப்பெண் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை கையை பிடித்து இழுத்ததால் கல்யாணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி எனும் பகுதியில் ஒரு தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது. இந்நிலையில் திருமணத்தன்று மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் பரேலிக்கு சென்றுள்ளனர். அங்கு மிக விமர்சையாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் திடீரென மணப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து நடனம் ஆட கூறியுள்ளனர். இந்த நேரத்தில் தான் இருவீட்டாருக்கும் இடையே வாக்கு வாதம் ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து இந்த வாக்குவாதம் பெரும் பிரச்னையக மாறி, ஒருக்கட்டத்தில் திருமணமே நிற்கும்  நிலைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தை நிறுத்திய பெண் மற்றும் பெண் வீட்டார் தங்களுடைய வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். மேலும், அவர்கள் மணமகன் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் பதிவு செய்துள்ளனர். இருத் தரப்பின்னரும் ஒப்புதல் தெரிவித்து, 6.5 லட்சம் ரூபாய் வரதட்சணை வழங்குவதாக இருந்துள்ளது. திருமணத்தை நிறுத்திய பிறகு மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இருப்பினும் முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இது வெறும் இருவீட்டார் பிரச்னை என்றும், அவர்கள் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மணமகன் வீட்டார் மீண்டும், மணப்பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்க சென்று சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், மணப்பெண் தன்னிடம் தகாத முறையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் நடந்து கொண்டதால் ஒருபோதும் இந்த திருமணம் நடக்காது என்று கூறி, திருப்பி அனுப்பியுள்ளார்.

Categories

Tech |