Categories
உலக செய்திகள்

தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல துளை – விஞ்ஞானிகள் தகவல் …!!

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியை தாக்காமல் தடுக்கும் இயற்கை அரணாக இருப்பது தான் ஓசோன் படலம். பூமியை சுற்றி இருக்கும் ஓசோன் படலமானது சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பெரிதும் உதவி புரிகின்றது. ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட், வாகனங்களிலிருந்து வரும் புகை உள்ளிட்டவைகள் ஓசோன் படலத்தை பாதித்து ஆங்காங்கே பெரிய துளைகள் விழும்படி செய்து விட்டன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பரவுவதை தடுக்க இந்தியா உட்பட பல நாடுகளில் வெவ்வேறு காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்தும் இல்லை, தொழிற்சாலைகள் இயங்குவது காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் பூமியில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவு குறைந்துள்ளது எனவே ஓசோன் படலத்தில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா ஏற்பட்ட துளைகள் குறைந்துள்ளதா என்பதை ஆராய அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

ஆனால் விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு மாறாக பூமியின் வடதுருவ ஆர்டிக் மேற்பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவில் மிகப் பெரிய துளை ஒன்று உருவாகியிருந்தது அதோடு. அது தென் துருவத்தை நோக்கி விரிவடைந்து சென்றது. இந்த தகவலானது விஞ்ஞானிகளையும் உலக மக்களையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனைத்தொடர்ந்து இந்த துளை குறித்து செயற்கைகோளின் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் அனைவரும் அதிசயிக்கும் படி ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டிருந்ததை கண்டுள்ளனர். ஐரோப்பிய மையத்தின் கேப்பர்நிக்கஸ் (ஈ.சி.எம்.டபிள்யூ.எஃப்) காலநிலை மாற்ற சேவை மற்றும் வளிமண்டல கண்காணிப்பு சேவை இதனை உறுதி செய்துள்ளன.  ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தாமாக மூடியதற்கு பூமியில் இருந்து வெளியாகும் மாசு காற்று குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்க அதனை மருத்துவ விஞ்ஞானிகள் மறுத்ததோடு ஓசோனில் ஏற்பட்ட துளை தாமாக மூடியதற்கு போலார் வோர்டெக்ஸ் என்னும் வாயு சுழற்சியே காரணமாகும் என தெரிவித்துள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |