ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார்.
அப்போது , சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது , திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது . அப்போது MLA யோகேஷ் வர்மா காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார் . அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குண்டு பாய்ந்த M.L.A யோகேஷ் வர்மா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றார்.