கொரோனோ அச்சம் காரணமாக சென்னை நீதிமன்றத்தில் முன்கூட்டியே கோடை கால விடுமுறை விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் உயிர்கொல்லி கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்குநாள் சற்று குறைவான வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதில் எந்த குறையும் இல்லை. கொரோனோவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு,
மால்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், ஊர் திருவிழாக்கள், திருமண மண்டபங்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்றங்களும் கொரோனோ பாதிப்பை கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி,
சென்னை உயர்நீதிமன்றத்திற்க்கும், அதன் கிளைகளுக்கும் முன்கூட்டியே ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பால் நீதிமன்ற பணிகளில் இறுதித் தீர்ப்பை விசாரணையின் மூலம் ஏற்க முடியாததாலும், கொரோனோ பாதிப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.