Categories
உலக செய்திகள்

விடுமுறை முடியும் தருணம்… “நாளைக்கு ஜாக்கிரதையாய் இருங்க” வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…..!!

நாளை பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த நான்கு நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விடுமுறை முடிந்து திரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாளை வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இது விடுமுறை முடியும் தருணம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் நாடு திரும்புவார்கள். எனவே நாளை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என வாகன ஓட்டிகளை பிரான்ஸ் சாலைப்போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான “பைசன் பியூட்” சாலைகளின் அனைத்து பகுதிகளும் சிவப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |