Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த கனமழையினை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |