கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளத்தகு.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறையும் பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம் . சில பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மார்ச் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.