Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை …. ஆசிரியர்கள் வரணும்….. அரசு போட்ட முக்கிய உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதுச்சேரியை இந்த புயல் தாக்குகிறது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் புயல் பாதிப்பு அதிகரிக்க கூடும். ஆகவே புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும்,

பாதிக்கப்பட்டோரை கொண்டு சென்று தங்குவதற்கான அதிகாரிகள் தற்போது செய்து வருவதால் நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவிவித்துள்ளது. இருந்தபோதிலும் அந்தந்த பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும் சமையல் கூடங்களும்,  ஊழியர்களுடன் அந்தந்த இடத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |