Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 13_ஆம் தேதியில் இருந்து விடுமுறை……..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து   பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது .

Image result for பள்ளிக்கல்வித்துறை

ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம்  வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது . மீதம் இருக்கக்கூடிய 1 முதல் 9_ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் தான் தேர்வு நடைபெறும் . ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் முன்கூட்டியே பள்ளியில் வேலை நாட்களை முடிக்க வேண்டுமென்று ,  ஏப்ரல் மாதம் 13_ஆம் தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு அந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது .

Categories

Tech |