அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 ரூபாயை நிதியுதவியாக வழங்கி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்றுஅழைக்கப்படும் அமேசான் காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஜன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. இந்த அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது.
ஆனால் பிரேசிலில் தான் 60 % காடுகள் உள்ளன. இந்த காட்டில் அரிய வகை உயிரினங்கள் பல உள்ளன. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று அனைவரும் கோரிக்கை வைத்தனர்.பிரேசில் அரசு இந்த காட்டு தீயை அணைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
பற்றி எரிந்துகொண்டிருக்கும் அமேசான் காட்டை பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என்று ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ முன்பே தெரிந்திருந்தார். மேலும் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கும் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கி உள்ளார். வனங்களை பாதுகாக்க டிகாப்ரியோ தலைமையில் எர்த் அலையன்ஸ் (EARTH ALLIANCE) என்ற அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.