Categories
உலக செய்திகள்

பாலியல் வழக்கில் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே குற்றவாளி..!!

பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் என்பவரை  மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளி என  நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் அவர் நீதிமன்றம் அருகில் இருக்கும் பிரபலமான போர் சீசன்ஸ் (Four seasons) ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சேர்ந்து விலையுயர்ந்த காபி உள்ளிட்டவற்றை அருந்திக் கொண்டிருந்தார். பின்னர் தீர்ப்பு வெளியான பிறகு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

Image result for Hollywood filmmaker Harvey Weinstein  and jailed at Rikers Island after he pleaded guilty to sex

இதையடுத்து போலீசார் கைவிலங்கிட்டு அவரை ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். மேலும் 11ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரையில், அந்த சிறையில் தான் அவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பார். இந்த வழக்கில் 25 ஆண்டுகள் ஹார்வேவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |