Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடுகளுக்கே வந்து முதியோருக்கான உதவி தொகை – முதல்வர் அதிரடி உத்தரவு …!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு சலுகை அறிவிப்பை வழங்கி வருகின்றார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மூத்த IAS அதிகாரிகள் தலைமையிலான 11  குழுவுடன் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

Don't know what good it did: Man who became face of demonetisation ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாதந்தோறும் 32,45,000 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |