Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு….. “முதலில் குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம் என்ன தெரியுமா”….?

முன்பெல்லாம் யார் வீட்டுக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்கச் சொல்வார்கள் நமது முன்னோர்கள். தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி தெரியாதவர்களாக இருந்தாலும் சரி கொடுத்த பின்பே மற்ற விஷயங்கள் பேசுவது மற்றும் அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பது போன்ற வழக்கம் இருந்தது,

இதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உண்டு. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் சக்தி உள்ளது.ஒரு மனிதனின் கோபத்தையும் வெறுப்புணர்ச்சியையும் மற்றும் ஆற்றல் தண்ணீருக்கு இருக்கிறது. ஏதாவது சண்டை சச்சரவு வரும் போதும் ஒருவரை ஒருவர் ஏச்சுப் பேச்சு நடத்தும்போது அவர்களை விலக்க வருபவர்கள் “முதல்ல தண்ணி குடீப்பா அப்புறம் பேசலாம்” என்று கூறுவார். சண்டையிடும் நபர் தண்ணீர் குடித்ததும் தனது பேச்சில் ஒருவித சாந்தம் வெளிப்படும்.

இதன் அடிப்படையில்தான் வீட்டுக்கு வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்தனர். வீட்டுக்கு வருபவரின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி அவர்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி தண்ணீரைக் குடித்தால் எந்தக் கெட்ட தாக்கத்தின் பாதிப்பும் இல்லத்தைப் பாதிக்காது

Categories

Tech |