Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை… மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது… வேதனை தெரிவிக்கும் மத்திய அமைச்சர்!

கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டுவது வேதனை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள்  அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மாற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை டெல்லி போன்ற பல இடங்களில் வாடகை வீட்டில்  குடியிருக்கும் மருத்துவர்களை கொரோனா அச்சம் காரணமாக வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்தது. இதனால் மருத்துவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் மிரட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, கொரோனா அச்சத்தால் வீட்டின் உரிமையாளர்கள் இதுபோல் செயல்படுவது வேதனை அளிக்கிறது. சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது என்றார்.

மேலும் “கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டு அச்சப்பட வேண்டாம். கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் அச்சுறுத்தக்கூடாது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களால் கொரோனா வைரஸ் பரவும் என்பது வதந்தி” என்று அவர் கூறினார். 

Categories

Tech |