வாழைக்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 2
கடலை மாவு – 2 கப்
கார்ன்ஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
ஆப்ப சோடா – 1 சிட்டிகை
ஃபுட் கலர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி , மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும் . கடலை மாவு , கார்ன்ஃப்ளவர் ,அரிசிமாவு ,சோம்பு தூள் ,பூண்டு விழுது , மிளகாய்தூள் , ஃபுட் கலர் , உப்பு மற்றும் சோடா சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து , வாழைக்காயை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார் !!!