கொரோனாவிலிருந்து இருந்து மீண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட் செய்துள்ளார்
இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.. தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருக்கிறார்.. எடுக்கப்பட்ட பரிசோதனையின் அவருக்கு நெகட்டிவ் என்று வந்ததால் வீட்டில் தனிமையை தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தி இருகிறார்கள்
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று எனது கொரோனா சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், என்னையும், என் குடும்பத்தினரை ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்.
மேலும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எனக்கு உதவிய மற்றும் எனக்கு சிகிச்சையளிக்கும் மெடந்தா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்..
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।— Amit Shah (@AmitShah) August 14, 2020
कोरोना संक्रमण से लड़ने में मेरी मदद करने वाले और मेरा उपचार करने वाले मेदांता अस्पताल के सभी डॉक्टर्स व पैरामेडिकल स्टाफ का भी आभार व्यक्त करता हूँ। @medanta
— Amit Shah (@AmitShah) August 14, 2020