எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார்.
நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இந்த வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமெழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியது. ஹோலி விடுமுறைக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். மேலும் 23ஆம் தேதிக்கு பிறகு எந்த வன்முறை சம்பவமும் நடைபெறவில்லையென்று பதிலளித்தார். போலீஸ் பணியில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான் கலவரம் பாதித்த இடங்களுக்கு செல்லவில்லை.
பிப்ரவரி 25-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மேல் டெல்லியில் கலவரக்காரர்கள் ஏதும் நடக்கவில்லை. தான் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவர பகுதிகளை பார்வையிட்டார் என்று அமித்ஷா எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார்.