வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தினக் கூலிகளாக, கட்டிட தொழிலார்களாக பணியில் உள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலார்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தொழிலார்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் நிலையில் உள்ளது.
இதனால் சொந்த ஊர் திரும்ப விரும்பும் வெளிமாநில தொழிலார்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் வேலை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் மாநிலத்துக்கு செல்ல போக்குவரத்து இல்லாததால் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.