தெலுங்கானா மாநிலத்தில் ஊனமுற்ற ஒரு பெண்ணை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பகுதியில் வசித்து வரும் 31 வயதான பெண்ணுக்கு காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்துள்ளது. அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பெற்றோர்கள் அவரை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபர் ஒருவர் 15 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவனுடன் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிறகு 24 வயது இளைஞனும், 15 வயது சிறுவனும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை 14 வயது சிறுவன் இதை வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோவை வைத்து அந்த 24 வயதான இளைஞன் அடிக்கடி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அப்பெண்ணின் சகோதரி அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அவரது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 24 வயது இளைஞன் மற்றும் 15 வயது மற்றும் 14 வயது சிறுவனை கைது செய்தனர். இரண்டு சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியிலும், மற்றொரு 24 வயது இளைஞரை சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊனமுற்றவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி இப்படி செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.