காஞ்சிபுரம் அருகே திருட வந்த இடத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு இடத்தை சேர்ந்த மோகன்- சீமா தம்பதியர், சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் எட்டையபுரத்தில் உள்ள வீடுகளில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டையபுர வீட்டில் வந்து தங்கி விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி விட்டனர். ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் திடீரென்று புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தனர், அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது .பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்து நகை, பணம் எதுவும் இல்லாததால் சமையலறையில் ஆம்லெட் சமைத்து சாப்பிட்டு விட்டு ஆத்திரத்தில் தீயை கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மோகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மோகன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருடர்களை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் வீட்டை கொளுத்திவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி வீண் ஆனதால் மோகன் சிவா வருத்தத்தில் உள்ளனர்.