அல்சரை குணப்படுத்த உதவும் வெந்தயக் கீரை உளுந்து கசாயம் செய்வது பற்றிய தொகுப்பு
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாத காரணத்தினாலும், போதுமான உணவை சாப்பிடாத காரணத்தினாலும் குடல்புண் (அல்சர்) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு எளிமையான மருந்தாக வெந்தயக்கீரை உளுந்து கசாயத்தை குடித்து வருவதனால் விரைவில் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து. – 15 கிராம்
வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
செய்முறை
வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். உளுந்தை லேசாக வறுத்து நன்கு உடைத்துக் கொள்ளவும்.
முதலில் வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து அடத்து வைத்துக்கொள்ளவும்.
கருப்பு உளுந்தை வறுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் ஒன்று வைத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் அடத்துவைத்த கீரை மற்றும் இடித்த உளுந்தை போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி 100 மில்லி அளவுக்கு வந்தவுடன் இறக்கிவிடவும். ஆறியவுடன் வடிகட்டி குடிக்கலாம்.
இந்த கசாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.