வீடு தேடி வாக்காளர் அட்டை அனுப்பும் திட்டத்தை சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹா தொடங்கிவைத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர் அட்டையை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை தபால் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். பான்கார்டு எப்படி வீடு தேடி வரும் அதுபோல வாக்காளர் அட்டையும் வீடு தேடி வரும் என்று அவர் கூறினார். ஒருவேளை ஓட்டர் ஐடி திரும்பி வந்தால் அட்ரஸ் மாறி விட்டதா என்பது போன்ற சோதனைகள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் முதல்முறை வாக்காளர்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களுக்கும் அவர்கள் விண்ணப்பித்தால் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும், வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.