Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 …!!

 பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 12 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ரேஷன் அட்டை தாரர்களின் மக்களுக்கு வருகின்ற 22ம் தேதி முதல் வீட்டிற்கே சென்று ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |