Categories
தேசிய செய்திகள்

HomeICICI, HDFC உள்ளிட்ட வங்கி பயனாளர்களுக்கு…. நாளை ஒரு நாள் தான் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்ப…..!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்து வந்தது. இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் சேர்த்து இன்னும் கூடுதல் வட்டியும் தொடர்ந்து வழங்கப்பட்டது.

இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கி தனது சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.அதனைப் போலவே எஸ்பிஐ வங்கி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டி உள்ளது.ஆனால் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐடிபிஐ ஆகிய இரண்டு வங்கிகளும் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சர் டெபாசிட் திட்டத்தை இன்னும் நீட்டிக்கவில்லை.

எனவே வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி உடன் இந்த வங்கிகளில் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் முடிவுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதியோருக்கு கூடுதலாக சிறு புள்ளி 75 சதவீதம் வட்டி கிடைத்தது. இந்நிலையில் எச்டிஎப்சி மற்றும் ஐடிபிஐ வங்கிகளில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கணக்கை தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |