மாலை டீயுடன் சாப்பிட சூப்பர் சைடிஷ் வெங்காய போண்டா..
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
மைதா மாவு – 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவுடன் வெங்காயம் , மைதா மாவு, சோம்பு, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் சுவையான வெங்காய போண்டா தயார்!!!