Categories
பல்சுவை

Homework கண்டுபுடிச்சது இவர்தானா?…. “உங்கள தா நாங்க ரொம்ப நாலா தேடிகிட்டு இருக்கோம்”….. யாருனு பாத்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வீட்டுப்பாடம் என்பது வகுப்பு நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய ஆசிரியர்களால் கூடுதலாக வழங்கப்படும் வேலை. வகுப்பில் ஆசிரியர் கற்பித்த கருத்துகளை மாணவர்களுக்கு மனப்பாடம் செய்ய உதவுவதே இந்த வீட்டு பாடத்தின் முக்கிய நோக்கம். ஆனால் இப்போது வீட்டுப்பாடம் வேடிக்கையாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக சித்திரவதை போலவே உள்ளது. வீட்டுப்பாடம் உதவியாக உள்ளதா? அல்லது தீங்கு விளைவிக்கிறதா? என்ற விவாதம் பல இடங்களில் எழுந்து வருகின்றது.

பள்ளி நேரத்தில் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை வீட்டிற்கு சென்று அதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடமானது தற்போது கட்டாயப்படுத்தி மாணவர்களுக்கு திணிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் இந்த வீட்டு படத்தை கண்டுபிடித்தவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? வீட்டு பாடத்தை கண்டுபிடித்தவர் ராபர்டோ நெவிலிஸ். 1905 இல் இருந்து 1970 வாக்கில் தங்களது மாணவர்களுக்கு முதன்முதலில் வீட்டுப்பாடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஆனால் அவர் வீட்டுப்பாடம் கொடுத்து தனது வகுப்பில் அடங்காமல் சேட்டை செய்த மாணவர்கள், சரியாகப் படிக்காமல் உள்ள மாணவர்களுக்கு வீட்டில் சென்று படிக்கும் படி தண்டனையாக கொடுத்தாராம். ஆனால் காலப்போக்கில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாக்கி திணிக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கிறோம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றால் நாம் ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதேபோன்றுதான் குழந்தைகளுக்கும் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் ஒருவர் நம்மை எந்த கேள்வியும் கேட்காமல் நாம் வேலை பார்க்கும் வேண்டும் என்றால் சிறு வயது முதலே நாம் படிப்பில் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. வீட்டுப்பாடம் என்பது ஒரு தண்டனையாக கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமையில் வீட்டுப்பாடம் கொடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் தண்டனை கொடுத்து வருகிறோம் என்பதுதான் உண்மை.

Categories

Tech |