திருமணம் முடிந்து 10 நாளில் புதுமணப்பெண் தோழியுடன் வாழ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி என்பவரும் சப்னா வர்மா என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பூஜாவை குடும்பத்தினர் கட்டாயம் செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது பூஜா சப்னாவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து அங்கித்திடம் கூறியுள்ளார். இதற்கு முதலில் ஆதரவு தெரிவித்து பின்னர் எதிர்ப்பு தெரிவித்தார் அங்கித்.
இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்து பத்தே நாட்களில் பூஜா சப்னாவை தேடி சென்று அவருடன் சேர்ந்து வாழ தொடங்கிவிட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பூஜா, அங்கித், சப்னா ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சப்னாவுடன் தான் செல்ல இருப்பதாக பூஜா உறுதியாக இருந்ததால் அங்கித் யாருமே எதிர்பார்க்காத வகையில் பூஜாவை சப்னாவிடம் விட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார். உச்சநீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.