திடீரென உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமேரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹோண்டுராஸ் நாட்டில் பினலெஜோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கடந்த 26 ஆம் தேதி இரவு திடீரென மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் 8.88 கி. மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்து தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.