செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, ஆளுங்கட்சி அவர்கள்தான் அதனால் காவல்துறையினர் அவர்கள் பக்கம்தான் போவார்கள். கண்டிப்பா சொத்து வரி உயர்வு சொல்லும்போது நாம் என்ன செய்ய முடியும், அதற்கு கண்டிப்பாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்கான ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடக்கும். பெட்ரோல் டீசல் விலை எல்லாம் சொல்கிறீர்கள், சொத்துவரி 150% க்கும் மேலாக வரி கட்ட வேண்டும்.
இதை ஏன் யாரும் வந்து பேச மாட்டேங்குறீர்கள். இது பொருளாதாரம் இல்லையா ? அதிமுக செய்ததினால் நாங்கள் 100லிருந்து 200 மாற்றுகிறோம், அது தப்பில்லை, அவ்வளவுதானே. மத்திய அரசு பரிந்துரையில் தான் சொத்துவரியை உயர்த்தியுள்ளோம் என திமுக சொல்வதை போல, மத்திய அரசு கொண்டு வந்த எல்லா திட்டங்களையும், இது மத்திய அரசு திட்டங்கள் என மெதுவாக சொல்ல சொல்லுங்கள். ரொம்ப சத்தம் போட்டு சொல்ல வேண்டாம்.
திமுகவிலிருந்து கொண்டு வந்த திட்டங்களை மத்திய அரசினுடைய திட்டங்கள், அதை எடுத்துட்டு மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்ல சொல்லுங்கள். அப்ப மட்டும் இது எல்லாமே திமுக செய்த வேலை என்று சொல்கிறீர்கள். எங்கு தப்பு நடக்கிறது என்று பாஜக சார்ந்து நீங்கள் பேசினீர்கள் என்றால் எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
திமுக அராஜகம் அதிகமாகி கொண்டே இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள் மக்களும் சொல்லிவிட்டார்கள். நான் வந்து அவர்கள் தேர்தலில் ஜெயித்தவுடன் நான் என்ன சொன்னேன் 6 மாதம் அவர்களுக்கு ஹனிமூன் காலம், அது முடிந்து விட்டது. இனிமேல் தான் பாஜக என்ன எல்லாம் செய்ய முடியும் ? எப்படி எல்லாம் அவர்களுக்கு பாடம் புகட்ட முடியும் என்று நாங்கள் செய்கிறோம். ஒவ்வொரு இடத்திலேயும் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், கொடுத்துக் கொண்டும் இருப்போம் என தெரிவித்தார்.