Categories
உலக செய்திகள்

“சீனா அராஜகம் தாங்க முடியல”… நாங்க பிரிட்டனுக்கே வாரோம்… போராட்டத்தில் ஈடுபட்ட ஹாங்ஹாங் மக்கள்…!!

சீன கம்யூனிச அரசாங்கத்தின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி ஹாங் ஹாங் நாட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 

கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் ஹாங்காங் இருந்தது. அதற்கு பின்பு ஹாங்காங் தனி நாடாக செயல்படுவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சீனகம்யூனிச அரசு தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம்  ஹாங்காங்கை முழுவதுமாக தன்வசப்படுத்த முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹாங்காங்கில் வசிக்கும் மக்கள் பிரிட்டனில் வந்து குடியேறுவதற்காக  விசா கட்டுப்பாடுகளில்  சில தளர்வுகளை அறிவித்தார். இது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் சீன அரசு பொது இடங்களில் ஒன்று கூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் என்று  குற்றம் சாட்டி  கைது செய்தது.

ஜனநாயக ஆதரவாளர்கள் மீதான சீனாவின் இந்த நடவடிக்கைக்கு  உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வந்தது.  இந்நிலையில் சீன கம்யூனிச அரசை  ஹாங்காங்கிலிருந்து  விரட்ட சிலர் வன்முறையிலும் ஈடுபட்டு  வருகின்றனர். மேலும் சிலர்  ஹாங்காங்கிலிருந்து  பிரிட்டனில் குடியேறுவதற்காக சில சட்ட விரோத செயல்களை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சீனாவின் அராஜகத்தை சகித்துக்கொண்டு வாழ்வதைவிட பிரிட்டனில் குடியேறுவதுதான் சிறந்தது என்று ஹாங் ஹாங் குடிமக்கள் விரும்பியதால் தற்போது விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  ஹாங்காங்கில் வாழும் ஏழை எளிய மக்கள் பிரிட்டனில் குடியேறுவது என்பது இயலாத காரியமாகவே இருப்பதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |