Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹூண்டாய் கார் தயாரிப்பில் சீனாவை முந்தியது இந்தியா…!!

சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை 2019 ஆம் ஆண்டில் சீனாவை விட அதிக அளவில் கார்களை தயாரித்து சாதனை படைத்திருக்கிறது.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சீனா, இந்தியா, அமெரிக்கா ஸ்டேட் குடியரசு, துருக்கி, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தனது வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தென் கொரியாவிற்கு வெளியே ஹூண்டாய் பிராண்டு கார்கள் சீனாவில் தான்  அதிகம் தயாராகி வந்த நிலையில், அந்த பெயரை தற்போது இந்தியா தட்டி சென்று இருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 6 லட்சத்து 58 ஆயிரம் கார்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஹூண்டாய்  தொழிற்சாலை 6 லட்சத்து 82 ஆயிரம் கார்களை தயாரித்து உள்ளதாக அந்த நிறுவனம் நிதி முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் 2019ஆம் ஆண்டு தென் கொரியாவிற்கு வெளியே ஹூண்டாய் கார்களை அதிக அளவு தயாரித்துள்ள தொழிற்சாலை என்ற பெயரை இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் தொழிற்சாலை பெற்று இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, வென்யு, நியாஸ், அவ்ரா, i20 வகை கார்கள்  இங்கு அதிக அளவில் தயாரிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |