Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஹார்லிக்ஸ், பூஸ்ட் எல்லாம் கடையில வாங்காதீங்க… “ஹோம் மேட் போர்ன்வீட்டா பவுடர்”… ஈஸி ரெசிபி…!!

வீட்டில் செய்யும் சத்துமாவு பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. மாற்றாக கடைகளில் கிடைக்கும் பூஸ்ட், போர்ன்வீட்டா போன்ற கலப்பட உணவுப் பொருட்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

அதே சுவையில் வீட்டிலேயே டிரிங் மிக்ஸ் செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

கொகோ பவுடர் – 1 ½ டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் – 50 கிராம்
பிரவுன் சர்க்கரை – 50 கிராம்
முந்திரி – 10
பாதாம் – 10

செய்முறை:

முதலில் பிரவுன் சர்க்கரையை மிதமான சூட்டில் வறுக்கவும். சிறிது நேரத்தில்கேரமல் நிறத்தில் பாகு போல வரும். டார்க் பிரவுன் நிறத்தில் பாகு வர வேண்டும். 3 நிமிடங்கள் வரை கைவிடாமல் அருகிலிருந்தே கிளறி கொண்டே இருக்கவும். தீய்ந்து விடுவதற்கு முன்னரே, உடனே அடுப்பை நிறுத்தி விடவும்.

அதில், கொகோ பவுடரை கொட்டி, நன்கு கலக்கவும். பின்னர், பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும். இவை கட்டி கட்டியாக வரும். நன்கு பவுடர் போன்று வரும் வரை உடைத்துக் கிண்ட வேண்டும்.

பின்னர் இதனை ஒரு தட்டில் போட்டு ஆறவிடுங்கள். இப்போது இன்னொரு பானில் முந்திரி மற்றும் பாதாமை போட்டு பிரவனாக வரும் வரை வறுக்கவும்.

வறுத்த பாதாமையும் முந்திரியையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். நல்ல பவுடராக அரைக்கவும். இந்த நட்ஸை அரைக்கும்போது மிக்ஸியை சிறுக சிறுக திருப்பி அரைக்க வேண்டும். ஒரே அடியாக மிக்ஸியை ஓட விட்டால் பொடி ஈரமாகிவிடும்.

இப்போது நாம் ஆறவைத்த கொகோ – பால்பவுடர் கலவையை இன்னொரு புதிய, ஈரமில்லாத ஜாரில் போட்டு நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து முடித்தவுடன் நட்ஸ் பொடியுடன் இதை சேர்த்துக் கலக்குங்கள். இப்போது ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடர் ரெடி.

Categories

Tech |