Categories
தேசிய செய்திகள்

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று விட்டு செம்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 47 மாணவர்களும் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். அதோடு சில மாணவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |