திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா, பூர்ணிமா, பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது.
இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது, பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் கொடூரமான முறையில் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளை பழனி அருவாளால் வெட்டியதாக தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல்களானது தெரிகிறது.
மேலும் பார்த்தோம் என்றால் இதில் பூமிகா மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான முறையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சை ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமமே தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த கொடூரமான செயல் நடந்து இருக்கின்றது. மேலும் பழனி இந்த ஐந்து பேரையும் வெட்டி கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதனுடைய உண்மை காரணம் என்ன ? உண்மையாகவே குடும்ப பிரச்சனையா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா ? என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்பொழுது அவர் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று ஒரு தகவலானது வெளியாகியிருக்கிறது.