சாலையில் நடந்து சென்ற குதிரை குழிக்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையின் முன்பு மின்கம்பம் நடுவதற்காக குழி தோண்டியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் நடமாடிய குதிரை அந்த குழிக்குள் தவறி விழுந்து இறந்து விட்டது. இதனை அடுத்து குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் குழிக்குள் இறந்து கிடந்த குதிரையை மீட்டு குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறாக போக்குவரத்துக்கு இடையூறாக கட்டுப்பாடுகளை மீறி விலங்குகள் சாலையில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.