Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீடிரென வெடித்த AC…! பதற்றமான அரசு மருத்துவமனை….! விழுப்புரதில் பரபரப்பு …!!

ஏசி எந்திரம் வெடித்து சிதறியதில் மருத்துவமனை ஆய்வகம் முழுவதும் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் உள்ளது.  இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆர்.என்.ஏ கண்டறியும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் அந்த ஆய்வகம் முழுவதும் தீக்கிரையானது. அதோடு ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததால் அவை வெடித்து அந்த இடமே கரும்புகை மூட்டத்தால் சூழ்ந்தது.

இந்த விபத்து குறித்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து  சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த இந்த தீ விபத்தினால் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான ஆய்வக உபகரணங்கள் தீயில் எரிந்தது. மேலும் இந்த தீ விபத்து விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |