மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.
இதனால் கொரோனா தொற்றுக்கு பயந்து சில சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனால் தமிழக அரசு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனிடையே வளர்ப்பு பிராணிகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளை யாரும் கைவிட வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.