Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்… நோயாளிகள் 9 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று ருமேனியா நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை ருமேனியா நாட்டின் கான்ஸ்டன்டா துறைமுக நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் ஒருவர் அனைத்து நோயாளிகளும் கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதோடு தீயும் நள்ளிரவில் அணைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே சுகாதார அமைச்சகம் இந்த விபத்து குறித்த தகவல்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார அமைச்சகம் அந்த மருத்துவமனையில் நோயாளிகள் 113 பேர் இருந்ததாகவும், அதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 நோயாளிகள் இருந்ததாகவும் கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு ருமேனியா நாடு இரண்டு பயங்கர மருத்துவமனை தீ விபத்துக்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

https://twitter.com/i/status/1443838009271595015

அதாவது ருமேனியாவின் வடக்கு நகரான பியாட்ரா நியாம்டில் கடந்த நவம்பர் மாதத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் 10 பேர் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் Bucharest’s Matei Bals மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் வார்டு ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

Categories

Tech |