Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையின் பேராசை… பறிபோன உயிர்… சீல் வைத்த அதிகாரிகள்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது.

அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை தந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டே இருக்கும் போது மேலும் கூடுதலாக 23,500 ரூபாயாய் மருத்துவ நிர்வாகம் கேட்டுள்ளது.அதற்கு ராகவேந்திரன் தன்னால் அவ்வளவு பணம் இப்போது தர முடியாது என்று கூறினார்.அதனைக் கேட்ட மருத்துவ நிர்வாகம் ராகவனையும் அவரது மனைவியையும் தரக்குறைவாகப் பேசி ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர்.

மேலும் நாங்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுக்காவிட்டால் உங்கள் மீது காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ராகவேந்திரன் கூடுதலான பணம் அளிக்காததால் அவருக்கு எவ்வித சிகிச்சையும் வழங்கப்படாமல் டிஸ்சார்ஜ் செய்யப்படாமலும் அங்கேயே வைத்திருந்தனர்.அதன்பின் அவர் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தது.

வீட்டிற்கு வந்த ராகவனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதன் பிறகு அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பின்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று உயிரிழந்தார். இதுகுறித்து ராகவேந்திரனின் மனைவி நந்தினி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அதிக பணம் வசூலிப்பதாக தெரியவந்தது. மேலும் ராகவேந்திரருக்கு முறையான சிகிச்சை அளிக்காததாலும், முறையான டிஸ்சார்ஜ் வழங்காததால் மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா சீல் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருவள்ளுவர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி மற்றும் ஆவடி தாசில்தார் செல்வம் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

Categories

Tech |