Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பற்றி எரிந்த மருத்துவமனை… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை நேற்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. அதில் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி ஒரு வார்டில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமில்லாமல் மின்னல் தாக்கியதில் மருத்துவமனை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தீயணைப்பு ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையின் ஏழு வாகனங்கள் ஈடுபட்டதாகவும், பொதுமக்கள் மருத்துவமனை தொடர்பிலான சாலையை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த சம்பவத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |