Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா…? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா”….? கமல்ஹாசன் கேள்வி..!!

கரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் இடிந்து விழுந்ததால் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், கொசூர் பகுதியில் தமிழக அரசின் அம்மா கிளிக் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த சமுதாய கூடத்தை தற்காலிகமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு அதனை அம்மா கிளினிக் ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி செல்லும் சாலையின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் விஜயபாஸ்கர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் திறப்பு விழாவின் போதே கட்டடம் இடிந்து விழுந்து இருக்கிறது. மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? அல்லது சிகிச்சை தேவைப்படுபவரை  உருவாக்கவா? என்றும், அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம் தானே இது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |