புதுக்கோட்டை மாவட்டதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து ஆய்வுக்குப் பின் பணீந்திர ரெட்டி கூறியுள்ளதாவது, ஊரடங்கால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதுடன் மருத்துமனைகளில் ஆக்சிஜன் தேவையும் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் ஆக்சிஜன் தகவல்களை அறிவதற்காக 104 எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.