கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கழிப்பறையில் உடலுறவு வைத்ததால் கைதுசெய்யப்பட்டார்.
இந்தோனேசியாவில் ஒரு ஆண் செவிலியர் நோயாளியுடன் பிபிஐ என்ற கிட்டை கழற்றிவிட்டு கழிப்பறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வாட்ஸப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாடை பகிர்ந்த நோயாளி இதனை தெரிவித்தார். சுகாதார ஊழியரின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தரையில் வீசப்பட்டு இருந்த புகைப்படமும் அதில் இருந்தது. இந்தோனேசியாவில் கடந்த வாரங்களில் கொரோனா வைரஸ் வழக்கத்தைவிட வேகமாக பரவி வருவதால் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அவசர மருத்துவமனை செவிலியர் ஒருவர், இவ்வாறு கொரோனா நோயாளியுடன் பாலியல் உறவு வைத்தது, எச்சரிக்கப்பட்ட பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் மத்திய ஜகார்தா போலீசில் ஒப்படைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நோயாளிக்கு கொரோனா இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுகாதாரத்துறை பணியாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.