கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி விரிந்துள்ளது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் பலத்த கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் முயற்சியில் அரசு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.இது தொடர்பாக பிரதமருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை குறித்து ஆராயப்பட்டன.
அதில் அனுமதிக்கப்பட்ட பி.எஸ்.ஏ ஆக்சிஜன் ஆலைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு, மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிரதமர், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை சீராக, எவ்வித தடையும்,தட்டுபாடுமின்றி நடப்பதை உறுதி அவ்வபோது உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.