கொரோனா நோய் பரவல் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு செலுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி உச்சத்தில் நிற்கிறது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை நிலையில் உள்ளன. இதனால் ஆக்சிஜனை விவேகத்துடன் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை செய்வதற்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில், கொரோனா நோய் பரவல் தொடங்கியதிலிருந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டுள்ளது. 1,02,400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் சென்ற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று 1,27,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு உற்பத்தி செய்ய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆக்சிஜனை விவேகமுடன் செயல்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்பின் மற்ற நிறுவனங்களுக்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன்கள் இறக்குமதி செய்வதை தடை செய்துவிட்டு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அதனை பயன்படுத்த வேண்டும். பிறகு முற்றிலும் தனியார் மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பயன்பாட்டினை கண்காணிக்க வேண்டும் என்று இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.