பிரியங்கா போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுகென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா. இதனையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தான் நடத்திய போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CbzmVPppH0X/