”ஹாஸ்டல்” படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் பீட்சா 2, தெகிடி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், இவர் நடிப்பில் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் தற்போது ”ஹாஸ்டல்” படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சதீஷ், முனிஸ்காந்த், நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு போபோ ஷஷி இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகும் ”ஹாஸ்டல்” படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.