‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் தொகுப்பாளினி டிடி நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக பிரபலமாக இருப்பவர் வருண்.
இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ஜோஸ்வா இமைபோல் காக்க, பப்பி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் பிரபல தொகுப்பாளினி டிடி நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.