ரவா பொங்கல்
தேவையான பொருட்கள் :
ரவா – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
முந்திரி – 10
வரமிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம் , மிளகு , முந்திரி , வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும் . இதனுடன் இஞ்சி , கறிவேப்பிலை , ரவா சேர்த்து வறுத்து வேக வைத்த பாசிப்பருப்பு , 2 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து வெந்ததும் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான ரவா பொங்கல் தயார் !!!